விடுதலைப் புலிகள் அமைப்பினரை தொடர்ந்து குற்றஞ்சாட்டும் அருண் சித்தார்த்
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் துணுக்காய்ப்பகுதியில் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சேவை அறிக்கை இடப்பட்ட இடங்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று என யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியிலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்பொழுது விசாரணைகள் இடம் பெறுகின்றது. ஆனால் ஒரு அமைப்பு சாராமல் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியாது என்ற நிலைப்பாடு நீதிமன்றத்தில் காணப்படுகின்ற பொழுது எங்களுக்குரிய நீதியினை பெற்று தருபவர்கள் யார்?
குறிப்பாக 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் துணுக்காய்ப்பகுதியில் அமைந்துள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் ஒரு சித்திரவதை முகாமினை இயக்கி வந்துள்ளார்கள்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் கொலை செய்யப்பட்டு பவானி குளம் சிவபுரம் பகுதியில் எரியூட்டி அவர்களுடைய சாம்பல் நீரில் கரைக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
கடந்தவாரம் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அபை்பினரால் சித்திரவதைக்கு உள்ளாகி புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அருண் சித்தார்த், பொதுமக்களால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
