செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நேற்றையதினம் வரையில் 12 நாட்கள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், நேற்றைய தினத்துடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணி
நேற்றைய தினம் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது, ஒரு மனித என்பு கூட்டு தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 05 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 261 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட என்பு தொகுதி ஒன்றின் மண்டையோடு பகுதி மாத்திரம் வெளி தெரிந்த நிலையில் , அது அகழ்ந்து எடுக்கப்படாத நிலையில் , அதற்கு இலக்கம் இடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam