செம்மணி விவகாரம்: காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதற்கு முன்வராமலிருப்பது எங்களுக்கு மனவேதனையான விடயம் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழியானது தமிழின அழிப்பின் அடையாளம் எனவும் அங்கிருந்த நினைவுச்சுடர் ஏற்றும் தூபி உடைக்கப்பட்டதானது இந்த நாட்டின் இனவாத முகத்தினை காட்டி நிற்பதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று காலை(11) கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கை
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி, கடந்த மே மாதம் ஐ.நா ஆணையாளர் இலங்கைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திவிட்டு அணையா விளக்கு போராட்டத்தினை பார்வையிட்டு சென்றார்.
எமது போராட்ட இத்திற்கு வந்த ஐ.நா ஆணையாளர் எமது வலியை புரிந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கூறிச்சென்ற நிலையில் தற்போதைய ஐ.நா அமர்வில் வெளிவந்திருக்கின்ற அறிக்கையானது பாதிக்கப்பட்ட மக்களாகிய எங்களுக்கு பாரிய ஏமாற்றத்தினையே தந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் சில நல்ல விடயங்கள் இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
சர்வதேச விசாரணை
நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றையே கோரிக் கொண்டிருப்போம். தற்போது இரண்டு வருட கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருடங்கள் முடிவுறும் போது நாங்கள் இருப்பமோ தெரியாது.
இவ்வாறு ஒவ்வொரு அரசாங்கங்கள் மாறும் போதும் அவர்களுக்குக் கால நீடிப்பினை வழங்கி பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களைக் காப்பாற்றி வருவதே ஐ.நா செயற்பாடாக இருக்கின்றது.
இந்த நிலையை மாற்றி இந்த அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி நீதியான சர்வதேச விசாரணையின் ஊடாக எமக்கான ஒரு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு ஐ.நா முன்வர வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
