வெளிநாடொன்றில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன்
துபாயின் ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கொட்டுன்ன பகுதியை சேர்ந்த 23 வயதுடைய திலக பெரேரா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கை இளைஞன்
2 நாட்களுக்கு முன்பு, ஷார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் அருகே தரையில் விழுந்து காயங்களுடன் அவர் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அங்குள்ள பாதுகாப்புப் படையினரால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
நியாயமான விசாரணை
கடுவெலவில் உள்ள போமிரியா கல்லூரியின் முன்னாள் மாணவரான திலக பெரேரா, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்கு சென்றிருந்தார்.
வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்டபோது, அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், இந்த விடயத்தில் தலையிட்டு நியாயமான விசாரணை நடத்துமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
