முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தின் 76ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வு நேற்றையதினம்(10) நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர்.
இரத்ததானம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் நலனையும் கருத்தில் கொண்டும் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையின் முக்கியமான சூழ்நிலையில் இந்த நிகழ்வை இராணுவத்தினர் நடத்தியிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் சசினி விஜயரத்ன , வைத்தியர் எஸ்.டீ.சமரசிங்கவின் பரிசோதனையின் கீழ் , 100 இரத்த தானம் செய்பவர்களின் பங்கேற்புடன் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு 59ஆவது காலாட்படை பிரிவின் வழிகாட்டுதலின் இராணுவ முகாம்களுக்கு கீழுள்ள குறித்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் 59ஆவது காலாட் படை தலைமை செயலகம், 591ஆவது படையணி தலைமை செயலகம், 12ஆவது இலங்கை இராணுவ காலாட் படை, 10ஆவது சிங்ஹ படையணி, 5ஆவது சிங்க படையணி, 14ஆவது கெமுனு ஹேவா படையணி, 593ஆவது படையணி தலைமை செயலகம், 6ஆவது கெமுனு ஹேவா படையணி , 6ஆவது தேசிய பாதுகாப்பு படையணி போன்ற படையணியை சேர்ந்த இராணுவத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கியிருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
