இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் அச்சுறுத்தல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
2040 ஆம் ஆண்டளவில் 0.95°-1.14°C வெப்பநிலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை மாற்றம் மழைவீழ்ச்சி என்பன இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், உள்நாட்டு உற்பத்தியையும் வாழ்க்கைதரத்தையும் குறைத்துவிடக்கூடும் என உலக வங்கி கூறியுள்ளது.
அதிக வெப்ப அழுத்தம் மற்றும் நீர் நிச்சயமற்ற தன்மை வாழ்வாதாரத்தை, குறிப்பாக கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், தற்போதைய 24.5 சதவீத விகிதத்திலிருந்து வறுமை அளவை மேலும் 1.8 சதவீதம் உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதாவது வெப்ப அழுத்தத்தால் தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைதல், விவசாய விளைச்சல் குறைதல் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.3 முதல் 3.5 சதவீதம் வரை பொருளாதார இழப்புகள் ஏற்படலாமென கூறப்படுகின்றது.
நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா, விவசாயம் மற்றும் மீன்வளம் போன்ற முக்கிய துறைகளில் பணிபுரியும் 80 சதவீத இலங்கையர்களுக்கு காலநிலை பெரும் தாக்கங்களை உண்டு பண்ணலாம்.
இலங்கையில், 2016 மற்றும் 2017 க்கு இடையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளாலும், பின்னர் கடுமையான வறட்சியாலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியத்தின் (UNDP) தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
