செம்மணி புதைகுழி : நீதியான விசாரணைக்கு உறுதி
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூடுகள் தொடர்பில் நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் தெரிவித்தார்.
நேற்று(25.11.2026) புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உரிய விசாரணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழி தொடர்பில் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். அரசாங்கம் என்ற வகையில் செம்மணி புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை கண்டறியும்.

சிறுவர்களின் உடற்பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பான பகுப்பாய்வு விசாரணைகள் இன்னும் இடம்பெறவில்லை.
ஆகவே பகுப்பாய்வுகள் இடம்பெற்று அவை தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் இடம்பெற்றதன் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் நிச்சயம் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.