குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ள செம்மணி விவகாரம்
இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானம் - (செம்மணி) மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் நேற்றையதினம்(21) மீள ஆரம்பமாகின.
இரண்டாம் கட்ட அகழ்வில் 16ஆம் நாள் அகழ்வுப் பணி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்பார்வையில் இடம்பெற்றது.
பொலிஸாரின் விசாரணையின் கீழ்
நேற்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரின் விசாரணையின் கீழ் இருந்த மனிதப் புதைகுழி விசாரணை குற்றப் புலனாய்வு (CID) பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபரினால் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





