மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இந்தியாவின் - தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் - மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த போதே அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக மேலும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளை சந்திப்பதற்கான முயற்சி
மேலும், அகதிமுகாமில் உள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமையால் ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான முயற்சி முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான எந்த தகவலையும், தமிழக அரசு இதுவரையில் வெளியிடவில்லை.
எனினும் அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய விடயமானது, ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், விசனத்தையும் உண்டாக்கியுள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan