கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உட்பட 12 சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசிகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அன்றிலிருந்து, இந்த வழக்கின் பிரதிவாதியான வைத்தியர் ஜயநாத் புத்பிட்டிய இதுவரையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
குற்றப்பத்திரிகை தாக்கல்
எனினும் குறித்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர தனி அமர்வொன்றை (ட்ரையல் அட் பார்) நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர், பிரதம நீதியரசருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை கொள்வனவு செய்வதற்காக, சுகாதார அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |