தேசபந்து தென்னக்கோன் உட்பட 8 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
2023 டிசம்பர் 31 அன்று வெலிகமவின் பெலேன பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட எட்டு சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான நடவடிக்கைககள் இன்று(07.10.2026) மாத்தறை உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் எட்டு சந்தேக நபர்களும் இன்று(07) மாத்தறை உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
குறித்த வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும், இந்த வழக்கு மாத்தறை பிரதம உயர் நீதிமன்ற நீதிபதி நந்தன அமரசேனவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணை நிபந்தனை
இதன்போது, தேசபந்து தென்னக்கோன் உட்பட 8 சந்தேக நபர்களும் தலா ரூ. 250,000 மற்றும் தலா ரூ.5 மில்லியன் பிணைத்தொகை கொண்ட 04 பிணைத்தாரர்களின் பேரில் விடுவிக்கப்பட உத்தரவிடப்பட்டது.
நான்கு பிணைதாரர்களில் இருவர் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நவம்பர் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.