வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான குற்றவாளி! பின்னணியில் மறைந்துள்ள குற்றங்கள்
வெளிநாடுகளில் பதுங்கியிருந்த 70 இற்கும் மேற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்
இதற்கிடையில், ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ரொட்டும்ப அமிலடம் விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அவர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முதலில் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து பின்னர் ரொட்டும்ப அமில குற்றப்புலனாய்வுத்துறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட அமில, கிளப் வசந்த கொலை வழக்கிலும் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மகந்துரே மதுஷின் பிறந்தநாள் விழாவில் கைது செய்யப்பட்டவர்களில் ரொட்டும்ப அமிலவும் ஒருவர் ஆவார்.
மேலும், அவரை இலங்கைக்கு நாடு கடத்த அங்குள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் ரஷ்யாவிற்கு தப்பிச்சென்றார்.
இருப்பினும், அந்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களால் அவரை கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்ததால், அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.