இரு தனியார் நிறுவனங்களில் பில்லியன் கணக்கான நிதி மோசடி - பணிப்பாளர்கள் அதிரடி கைது
இரு தனியார் நிறுவனங்களில் சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்குவதாக வாக்குறுதியளித்து பணத்தை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரு நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையை தொடர்ந்து நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணிப்பாளர்கள் இருவர் கைது
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு நிறுவனங்களிலும் பணியாற்றிய மூன்று பணிப்பாளர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மற்றும் கொஹுவளை பகுதிகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களால் செய்யப்பட்ட நிதி மோசடியின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 4 பில்லியன் என தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு 80 முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (21) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.