சனல் 4 விவகாரம்! இறுதி தீர்மானம் எடுக்கவுள்ள இலங்கை அரசாங்கம்
சனல் 4 நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் அந்த நிறுவனத்திற்கு உரிய பதிலை வழங்குவதே பொருத்தமானது என்று பலரும் வலியுறுத்தினார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பில் அமைச்சரவை இறுதி தீர்மானத்தினை எடுக்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.
புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஆதரவு
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சனல்-4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிறுவனமானது, தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் அவர்களின் கொள்கைகளை முன்னெடுக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு வருகின்றது.
மேலும், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிபதற்கு முன்னதாக இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு, நாட்டின் அபிமானத்தையும், படையினரின் கௌரவத்தையும் தொடர்சியாக குறைமதிப்புக்கு உட்படுத்தி வருகின்றது.
ஆகவே, சனல் 4 நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
ஆகவே இலங்கை அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் அந்த நிறுவனத்திற்கு உரிய பதிலை வழங்குவதே பொருத்தமானது என்று பலரும் வலியுறுத்தினார்கள்.
இதனடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் விடயங்களின் பின்னரேயே அமைச்சரவை இறுதி தீர்மானத்தினை எடுக்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
