சனல் 4 காணொளி விவகாரம்! பிள்ளையான் கடும் கண்டனம்

Pillayan Sri Lanka Easter Attack Sri Lanka
By Dhayani Sep 05, 2023 09:20 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் channel 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் தனது கண்டனங்களை வெளியிடுவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கன்சீர் அசாத் மௌலானா என்பவர் தனது தனிப்பட்ட அரசியல் புகலிடக்கோரிக்கைக்காக எங்களை வீழ்த்துவதற்கு காத்திருந்த அந்நிய சக்திகளுக்கு துணை நிற்கும் விதமாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து எம்மையும் தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான முறையில் அளித்த வாக்குமூலத்தையும், அதனையொட்டியதாக channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் சித்தரித்து வெளியிடப்பட்ட காணொளியையும் இன்றைய தினம் நானும் பார்த்திருந்தேன்.

சனல் 4 காணொளி விவகாரம்! பிள்ளையான் கடும் கண்டனம் | Channel4 Telecast Easter Attacks Details

சிங்கள அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா..! நாடாளுமன்றத்தில் கேள்வி

சிங்கள அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா..! நாடாளுமன்றத்தில் கேள்வி


புகலிடக்கோரிக்கை 

உண்மையிலேயே ஐரோப்பாவில் இயங்கி வரும் இவ்வாறான ஒரு ஊடகம் உண்மையை சரிவர ஆராயாமல் மக்களை குழப்பி திசைதிருப்பும் வண்ணமாக உண்மைக்கு புறம்பான இச்செய்திகளை வெளியிட்டிருப்பது மனதிற்கு மிகவும் கவலையளிக்கின்றது.

மேலும் கன்சீர் அசாத் மௌலானா என்பவர் நான் முதலமைச்சராக இருந்த காலம் முதல் எம்மோடு இணைந்து அலுவலகம் சார்ந்த செயற்பாடுகளில் இயங்கி வந்த ஒருவர் சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னதாகவே தனது இல்லற வாழ்வில் ஏற்பட்ட பாரிய பிணக்குகள் காரணமாக தனது சூழலை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருப்பதாக கருதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

சாதாரணமாக புலம்பெயர் நாடுகளில் புகலிடக் கோரிக்கையினை முன்வைப்பவர்கள் எம்மையும் எமது கட்சியினையும் விமர்சித்து தமது புகலிட கோரிக்கையினை உறுதிப்படுத்துவது வழமை.

சனல் 4 காணொளி விவகாரம்! பிள்ளையான் கடும் கண்டனம் | Channel4 Telecast Easter Attacks Details

இருந்தபோதிலும் இவர் என்னுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாக இன்னும் சற்று ஆழமாக சென்று குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை தத்துருவமாக சித்தரித்து தனது புகலிட கோரிக்கையினை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதுவும், தனக்கு பின் நின்று இந்நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு செய்த அந்நிய சக்திகளையும் தனவந்த கும்பல்களையும் திருப்திப்படுத்தியுள்ளார் என்பதும் தெளிவாகின்றது.

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)


நான் கடந்து வந்த பாதைகளில் இவ்வாறான வஞ்சகத்தனத்திற்கும், துரோகத்திற்கும் பஞ்சம் இல்லை என்பதனை பல தடவைகள் நேரடியாகவே உணர்ந்துள்ளேன்.

மேலும் அக்காணொளியின் கருப்பொருளாக சித்தரிக்கப்படுவது ஈஸ்டர் குண்டு தாக்குதலானது ஆட்சி மாற்றத்திற்கான ஒரு யுத்தியாகவே காண்பிக்கப்படுகிறது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதனை அரசியலில் சாதாரண அறிவு கொண்டவர்கள் கூட நன்கு அறிவார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய தேர்தல்

ஏனெனில் ஈஸ்டர் குண்டு தாக்குதலானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்டிருந்தது. ஆனால் 2018 ஆரம்பத்திலேயே இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது அமோக வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிலை நிறுத்தியிருந்தது.

அவ்வாறான ஒரு நிலையில் இவ்வாறான ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திருக்காது என்பதனை சாதாரண மக்களாலும் உணர முடியும்.

அவ்வாறு கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி மிகவும் பலமான நிலையில் இருந்த போது தான் அவர்கள் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு மிகப் பிரமாண்டமான வெற்றியினை பெற்றிருந்தார்கள்.

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)


அத்தோடு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஈஸ்டர் குண்டு தாக்குதலானது மிக கொடூரமானதும், மிலேச்சத்தனமானதும் கூட. எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதி உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே கன்ஸீர் அசாத் மௌலானாவும் கூட தானும் நேரடியாக குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் போன்று கருத்துக்களை வெளியிட்டுடிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

குறித்த விசாரணையின் கீழ் அவரும் உள்வாங்கப்பட வேண்டும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

சனல் 4 காணொளி விவகாரம்! பிள்ளையான் கடும் கண்டனம் | Channel4 Telecast Easter Attacks Details

ஐ.எஸ்.ஐ. எஸ் அமைப்பின் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல்

இஸ்லாமிய அடிப்படை வாத பயங்கரவாதிகளால் மிகவும் வன்மமான முறையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திராதவர்களுக்கு இவ் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எதுவித ஐயப்பாடுகளும் இல்லை.

மேலும் அதிகளவான புத்திஜீவிகளையும் செல்வந்தர்களையும் கொண்டு இயங்கும் இஸ்லாமிய கடும்போக்குவாத ஐ.எஸ்.ஐ. எஸ் அமைப்பின் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கான ஓர் முயற்சியாக இருக்குமோ என்கின்ற ஐயப்பாடும் எமக்கு வலுப்பெற்றுள்ளது.

அத்துடன் இக்கதையுடன் பிரதானமாக தொடர்புபடுத்தப்படும் இராணுவப் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே குறித்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவத்தின் போது இலங்கை நாட்டில் இருக்கவில்லை என்றும், அவர் வெளிநாட்டில் இருந்தார் என்றும், 2018 ஜனவரி முதல் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெறும் வரை அவர் இலங்கையின் பாதுகாப்பு கடமையில் செயல்படவில்லை எனவும், தமது channel 4 தொலைக்காட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக குறித்த channel 4 நிறுவனமே அக்காணொளியில் வெளிப்படுத்தியுள்ளது.

சனல் 4 காணொளி விவகாரம்! பிள்ளையான் கடும் கண்டனம் | Channel4 Telecast Easter Attacks Details

மேலும் என்னையும் ராஜபக்ச குடும்பத்தையும் குறித்த காணொளி தொடர்பில் channel 4 நிறுவனம் தொடர்புகொள்ள முற்பட்ட போது நாங்கள் அதனை மறுத்திருந்ததாகவும் மிகவும் அப்பட்டமான போலிச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பும் channel 4 நிறுவனமானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் வேறுபட்ட காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4இன் ஆவணப்படம்: வெளியானது முன்னோட்ட காணொளி(Video)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4இன் ஆவணப்படம்: வெளியானது முன்னோட்ட காணொளி(Video)


கண்டனங்கள்

எனினும் தற்போது கன்சீர் அசாத் மௌலானாவின் புகலிட கோரிக்கையினை மையப்படுத்தி ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளது.

எனவே ஊடகங்கள் தமது ஊடக தர்மத்தினை கடைப்பிடித்து செய்திகளை ஆராய்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதனை தவிர்க்க வேண்டும் என்பதனையும் இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன்.

ஆகவே எமது கட்சியினை நம்புகின்ற மக்களுக்கும் அக்காணொளியினை பார்க்கின்ற மக்களுக்கும் எம்மை மழுங்கடிக்க நினைக்கும் எதிரிகளுக்கும் நான் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில் இது ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி என்பதனையும் அதில் பெயர் குறிப்பிடப்படும் எனக்கோ அல்லது எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு சார்ந்தவர்களுக்கோ நேரடியாகவும் சரி, மறைமுகமாகவும் சரி குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதுவித தொடர்புகளும் இல்லை என்பதனையே என்றும் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவை உடன் பதவி நீக்க வேண்டும்: சாணக்கியன் பகிரங்க வலியுறுத்தல்

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவை உடன் பதவி நீக்க வேண்டும்: சாணக்கியன் பகிரங்க வலியுறுத்தல்


மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US