உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4இன் ஆவணப்படம்: வெளியானது முன்னோட்ட காணொளி(Video)
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் இன்று(05) ஒளிபரப்பவுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தின் முன்னோட்டம்(ட்ரெய்லர்) வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முழு காணொளி பிரித்தானிய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது. இலங்கை நேரப்படி அதிகாலை 03:30இற்கு இந்த காணொளி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா..! நாடாளுமன்றத்தில் கேள்வி
அசாத் மௌலானாவின் அறிக்கை
குறித்த ஆவணப்பட நிகழ்ச்சி தொடர்பில் விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று அறிவித்தார்.
இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தி டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆதாரம் அமைந்துள்ளது.
சனல் 4 வெளியிடப்போகும் ஆவணம்: ஒரு வருடத்திற்கு முன் எமது ஊடகத்தில் அம்பலப்படுத்திய முக்கிய இரகசியங்கள் (VIDEO)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |