பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவை உடன் பதவி நீக்க வேண்டும்: சாணக்கியன் பகிரங்க வலியுறுத்தல்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்திற்கு வழங்கப்பட்ட அசாத் மௌலானாவின் வாக்குமூலத்திற்கு அமைவாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் விசாரணை முடியும் வரையில் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேயை பதவியில் இருந்து நீக்குவதுதான் இலங்கை அரசாங்கத்தால் எடுக்கக்கூடிய நடவடிக்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவரின் முகப்புத்தக பதிவில் மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - கோட்டா, மகிந்த, பசில் & பிள்ளையானுக்கும் தொடர்பு? அசாத் மௌலானாவின் வாக்குமூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள்
தொடர்ச்சியாக நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் எமது தமிழரசுக் கட்சியும் நானும் தொடர்ந்து வலியுறுத்தும் விடயம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு அதனோடு சம்பந்தப்படவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது.
நாட்டை உலுக்கப்போகும் அறிவிப்பு: பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் குறித்து லண்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
சர்வதேச செய்தித் தளமான Channel 4 Newsஇனால் வெளியிடப்பட்டுள்ள காணொளிக்கு அமைவாக அனைத்து விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டுவிட்டர் பதிவில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 4ஆவது ஆண்டு நினைவு தினத்தில் இந்த தகவலை நான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் இலங்கை அரசாங்கம் அதை கவனிக்கவில்லை.
தற்போது இந்த தகவல் வெளியாகி இருப்பதால், விசாரணை முடியும் வரையில் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவை பதவியில் இருந்து நீக்குவதுதான் இலங்கை அரசாங்கத்தால் எடுக்கக்கூடிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
I brought this info to light on the 4th remembrance of the Easter Sunday attack but #GOSL took no notice. Now that this information is out in the open, the least that the #GOSL can do is remove Pillayan and Suresh Salley from their positions until the investigation is concluded pic.twitter.com/IYXxV43fzH
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) September 5, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |