கிவுல் ஓயா திட்டம் மூலம் இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சி - போராட்டத்திற்கு சத்தியலிங்கம் எம்.பி அழைப்பு
கிவுல் ஓயா திட்டம் மூலம் வவுனியா - முல்லைத்தீவு மாவட்ட இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது எனவே எதிர்வரும் 02ஆம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று(29.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு
மேலும் தெரிவிக்கையில், வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கும் நோக்குடனும், எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இத்திட்டம் அமையவுள்ளது.

அத்தோடு வனவளத்திணைக்களமே குறித்த பிரதேசத்தினுடைய பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கும் நாம் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளோம்.
அதன் அடிப்படையில், குறித்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 02ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளோம்.
எனவே, எமது எதிர்காலத்தினை சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் அனைவரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri