சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தடையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச மற்றும் தனியார் ஊழியர்கள், பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அரச அதிகாரிகளை கடமைக்கு அழைக்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டதுடன், அடுத்த இரு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பல பாடசாலைகளுக்கு விடுமுறைகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், இணைய வழி கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்வோருக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதில் முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
