தபால் மூல வாக்களிப்பு திகதியில் மாற்றம் - வெளியான தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாற்றம் ஏற்பட்டதற்கான காரணம்
முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
