இலங்கைக்கு தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப்
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை சமாளிக்க சமகால அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் முதலீட்டு பிரிவின் ஆலோசகர் அமரசேன அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் இராஜதந்திர மட்டத்திலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
44 சதவீத வரியால் மிகப்பெரிய அழுத்தம் உள்ளது. இந்த வரி அரசாங்கத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் பாதிப்பாக மாறும்.
வரியால் நெருக்கடி
இந்த வரியால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்க நேரிடும். அது சிறிய காலப்பகுதிக்கான பாதிப்பாக இருக்காது. நீண்ட கால பாதிப்பாகவே இருக்கும்.
இலங்கை போன்ற நாட்டினால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது. டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்படும் வரிகள் அமெரிக்கர்கள் மீதே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தால் இலங்கை மீது 44 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாடு தற்போது 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.