அரசுக்கு எதிரான முன்னாள் ஜனாதிபதிகளின் இரகசிய நகர்வு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்பில் தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருடன் இணைந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவலை அவர் மறுத்துள்ளார்.
உரிமைகளை நீக்கும் சட்டமூலம்
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப் பிரிவு, குறித்த தகவல் முற்றிலும் தவறானவை என தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படவுள்ளமை தொடர்பில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எவ்வித சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பிலான அடுத்த கட்ட ஆராய்வுக்காக சுமார் 50 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் அணுகி வருவதாகவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
