சந்திரிக்காவின் நம்பிக்கைக்கு உரிய நபரால் நாட்டுக்கு நேர்ந்த பரிதாப நிலை
2015ஆம் ஆண்டு நம்பிக்கை வைத்து அழைத்து வந்தவரே நாட்டையும் கட்சியையும் சாப்பிட்டு விட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தவறு சரி செய்யப்பட்டது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச குடும்பமே நாட்டை வங்குரோத்து அடையச் செய்தததது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை அழைத்து வந்தேன்.
அவரில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் நாட்டையும் கட்சியையும் சாப்பிட்டு விட்டார்.
இருப்பினும் அந்தத் தவறு இன்று சரி செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |