நாட்டில் மழை பெய்வதற்கான வாய்ப்பு:வானிலை மையம் அறிவிப்பு
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தற்போது நிலவும் வரட்சியான வானிலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலத் திணைக்கள தகவலின்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வறண்ட வானிலை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
எனினும் நாட்டின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |