பாதாள உலக கும்பலை வளர்த்துவிட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
இனப் பிரச்சினைக் காலத்தில் இலங்கையின் ஆட்சியாளர்களே பாதாள உலகக் குழுக்களை வளர்த்து விட்டதாக அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அடியாள் போல இந்த பாதாள உலகக் கும்பல் அப்போது பயன்படுத்தப்பட்டது.
பாதாள உலகக் கும்பலை பயன்படுத்தி ஆட்கடத்தல்கள் மற்றும் பண மோசடி போன்ற நடவடிக்கைகளையும் அவர்கள் செய்தார்கள்.
ஆட்சியாளர்களின் அடியாளாக இருக்கும் இந்த பாதாள உலகக் கும்பலின் வரலாற்றில் துப்பாக்கிச்சூடு ஒரு புதிய விடயமல்ல.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் காலத்திற்கு பின்னர் பாதாள உலகக் கும்பலை சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக மு.திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியிலும் ஆட்சியாளர்களே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |