நாட்டில் இரு மாகாணங்களுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் அதிக குற்றங்கள் நிகழும் மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புலனாய்வுத் தகவல்
கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் நேற்று(22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் 57 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களும், அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13, T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75, 12-போர் துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் பிற துப்பாக்கிகள் நான்கும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
