பெண்களுக்காக அநுர வழங்கியுள்ள சலுகைகள்:மக்கள் வெளியிட்டுள்ள கருத்து
வரவு செலவு திட்டத்தில் அநுர பெண்களுக்காக வழங்கிய சலுகைகள் வரவேற்கத்தக்க விடயமாகும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மக்கள் குரல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மக்கள் இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) முன்மொழியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ,உதாரணமான அரசாங்க பாடசாலையிலுள்ள மாணவிகளின் சானிட்டரி நப்கின்களுக்காக 1.4 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கர்ப்பிணித் தாய்மார்களுக்காக 7000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயமானது வரவேற்கத்தக்கது என்றும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |