வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம்: பூசகரிடம் பொலிஸார் விசாரணை
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளன.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததன.
இந்த நிலையில் கடந்த வருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6 மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்ப்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிஸாரால் அடாவடியான முறையில் கைது செய்யப்பட்டனர்.
சிவராத்திரி தினம்
இது தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியதுடன், பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.
இந்தநிலையில் இம்முறை சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலயத்தின் பூசாரியார் மற்றும் முக்கியஸ்தர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் பெறப்பட்டுள்ளன.
பூஜை
இது தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்டபோது, இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணி வரை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

6 மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரி தினம் வெடுக்குநாறி மலையில் சிறப்பாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan