கனேமுல்ல சஞ்சீவ கொலை - வட்ஸ்அப் உரையாடலில் சிக்கிய ரகசியம்
பாதாள உலகக் கும்பல் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சாலிந்த என்ற நபரை தொடர்புக் கொண்டுள்ளார்.
இருவரும் வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டமை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் வேலையை செய்யுங்கள். வெளியே எல்லாம் சரியாக உள்ளது. பயப்பட வேண்டாம். வேலை சமநிலையில் உள்ளது.
துப்பாக்கிச்சூடு
பயமின்றி அடிக்க முடியும் என கொமாண்டோ சாலிந்த தெரிவித்துள்ளார். உள்ளே ஏதாவது பிரச்சனையா? நான் உள்ளே இருக்கிறேன் என துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறிப்பிட்டுள்ளார்.

“இல்லை அடியுங்கள். அவரை முடித்துவிடுங்கள். எல்லாம் சரியாக உள்ளது என கொமாண்டோ சாலிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது துப்பாக்கி சூடு நடத்தியவர் பொலிஸார் குறித்து வினவியுள்ளார். காலை 9.48 மணிக்கு, எல்லாம் நீங்கள் துப்பாக்கி சூடு நடத்துங்கள் என கொமாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், காலை 9.54 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொமாண்டோ சாலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார். அவர் உயிரிழந்துவிட்டாரா என வினவியுள்ளார்.

உயிரிழந்து விட்டார் என துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தெரிவித்துள்ளார். அருமை, நீ தான் என் உயிர் என கொமாண்டோ தெரிவித்துள்ளார்.
என்ன அண்ணா இப்படி கூறுகின்றீர்கள், நீங்கள் எனக்கு உணவளித்து, ஒரு தந்தையைப் போல என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நீங்கள் தான் என் உயிர் என குறிப்பிட்டுள்ளார். தங்கை அங்கேயே இருக்கிறார். நான் அங்கிருந்து வந்துவிட்டேன் என துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பதிலளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri