சிங்கள பெண்ணை காதலித்து தன்னை புலியென கூறிக்கொள்ளும் சாணக்கியன் : கடுமையாக சாடிய அமைச்சர் (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சிங்கள பெண்ணை காதலித்து தன்னை புலியென கூறிக்கொள்வதாக கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் போலியாக புலிச் சாயம் போர்த்திக் கொள்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மடியில் படுத்துறங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என சாணக்கியனை சாமர சம்பத் தஸநாயக்க ஒருமையில் தூற்றிய சம்பவமும் இதன்போது பேசுபொருளாகியுள்ளது.
இரா.சாணக்கியன் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியை பெற்று, மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்டார் என குறிப்பிட்டார்.
வெளியேறிய சாணக்கியன்
இதன்போது நாடாளுமன்றத்தில் இருந்து சாணக்கியன் வெளியேறிய போது, “போக வேண்டாம். இருந்து கேட்டுவிட்டு செல்லுங்கள் என சாமர சம்பத் தஸநாயக்க கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய சாமர சம்பத் தஸநாயக்க,
தற்போது சென்றவரே மகிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக இருந்தார். 2010 ஆம் ஆண்டு டார்லி வீதியில் எமது கட்சி உறுப்புரிமையை பெற்றவர்.
சாணக்கியன் சென்றது கண்டி சில்வெஸ்ரர் கல்லூரிக்கு. சிங்கள மக்களின் வீடுகளிலேயே உணவு உண்டார்.
எமது கண்டி மாவட்டத்தில் அவர் வளர்ந்தார். இருப்பது கண்டியில், கல்வி கற்றது சிங்களப் பாடசாலையில், தற்போது புலி புலி என கூறிக்கொள்கின்றார்.
வடக்கில் எதுவுமே கிடைக்காது
இவர் மனிதரா? தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள 10 பேர் இங்கு இருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய 9 பேருக்கும் புலி என கூறினால், அதனை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள். எனினும் மட்டக்களப்பில் இருந்து வந்து கண்டியில் சிங்கள மக்கள் வீடுகளில் உண்டு, சிங்கள மக்களின் வீடுகளில் உறங்கிவிட்டு, புலி புலி என கூறிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை சாணக்கியன் தற்போது மாற்றி வருகின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஐவரும் தற்போது ஜனாதிபதியுடனேயே இருக்கின்றனர். இவர்கள் பக்கம் ஐவர் மாத்திரமே உள்ளனர்.
இவர்கள், வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வருகின்றனர். அடுத்த முறை வடக்கில் எதுவுமே இவர்களுக்கு கிடைக்காது.
மைத்திரியிடம் உறுப்புரிமை
இதற்கு மேல் நாம் எதனையும் கதைக்கப் போவதில்லை. எனினும் எம்மை தூண்டினால் எமக்கும் கூறுவதற்கு விடயங்கள் உள்ளன.
இவ்வளவு காலமும் அவருக்கு நாம் இடம்விட்டுக் கொடுத்தோம். சமூக வலைத்தளத்திற்கு சென்றால் அவர் கூறுவதை தான் இந்த நாட்டு மக்கள் கேட்கின்றனர் என சாணக்கியன் நினைத்துக்கொண்டிருகின்றார்.

அது இந்த நாட்டில் இடம்பெறாது. அவ்வாறு எண்ண வேண்டாம் என அவரிடம் கூறுங்கள்.
மகிந்த ராஜபக்சவின் மடியில் இருந்துவிட்டு, மகிந்தவிடம் உணவு உண்டுவிட்டு, மைத்திரிபால சிறிசேனவிடம் உறுப்புரிமையை பெற்றுவிட்டு, இன்று மகிந்த ராஜபக்ச தொடர்பாக இரா.சாணக்கியன் கதைக்கின்றார்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூய்மையான உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri