ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு: வலியுறுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் இன்று (07.12.2023) இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கின் பிரச்சினைகள்
உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏனைய பகுதி வாழ் மக்களும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
