“எனது குடியுரிமைகளை பறிக்க முயற்சிக்கின்றனர்”- சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக தம்மை தண்டிக்கவும் அவரது குடியுரிமைகளை பறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர்.
இந்தநிலையில் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவே இந்த புதிய ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது, தங்களின் குடியுரிமைகளை பறிப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் பாதிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு மின்சாரம் இல்லை, குழந்தைகளுக்கு பால்மா இல்லை, உழைக்கும் மக்களுக்கு உணவைப் பெற்றுக்கொள்ள வழி இல்லை,
விவசாயிகளுக்கு உரம் இல்லை, மக்களுக்கு அரிசியை பெற்றுக்கொள்ள வழி இல்லை
அத்துடன் 2010க்குப் பிறகு நடந்த மோசடியின் விளைவாக மிகப்பெரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
