மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி
மாவத்தகம பிரதேசத்தில் தனது மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இங்குறுவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனுக்கேவத்தை வசிக்கும் 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்சேலாகே வசந்தா குமாரி திசாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாவத்தகம நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தனது மகளை பேருந்தில் ஏற்றுவதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலையில் சற்று தொலைவில் அமைந்துள்ள பிரதான வீதிக்கு வந்துள்ளார்.
தாய்க்கு நேர்ந்த கதி
மகளை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு நோக்கி செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குப்புற விழுந்தமை காரணமாக நீரில் மூழ்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நீண்டகாலமாக சுகயீனமுற்று இருந்த அவர் அதற்கான மருந்துகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவ அறிக்கை
இப் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதுடன், தனது இரு பிள்ளைகளுடன் அவர் மாவத்தகம துனுக்கேவத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் நீதிவான் மருத்துவ அதிகாரி யூ.எல்.எம்.எஸ். பெரேரா அவர்களால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணம் என நீதிவான் மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை