இலங்கையில் தீவிரமடையும் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு மாகாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று (20) முதல் கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் நேற்று (19) விடுத்த இந்த எச்சரிக்கையின் படி இந்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும்
கிழக்கு மாகாணம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சில இடங்களில் பகல் நேரங்களில் உடல் வெப்பநிலை "கவனிக்கத்தக்க" அளவிற்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, கடும் வெப்பத்தின் தாக்கங்களை குறைப்பதற்காக, போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் வெப்பமான நேரங்களில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்தல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை