இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்த சாமர எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க(Chamara Sampath Dassanayake ), லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் பொலிஸ் ஆட்சேர்ப்பின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் முறைகேடுகள் தொடர்பில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்த விவகாரம் குறித்து தமது கருத்தைத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, காவல்துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு 2024 ஆண்டு வெளியிடப்பட்டதாகக் கூறினார்.
அந்த வர்த்தமானியின்படி நடத்தப்பட்ட திறனாய்வுத் பரீட்ச்சையை தொடர்ந்து, அதே ஆண்டில் நவம்பரில் தகுதியான 100 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.
இருப்பினும், இந்த திட்டமிடப்பட்ட நியமனங்கள் தகுதியான 100 பேருக்கு வழங்கப்படவில்லை என்றும், அரசாங்கம் தற்போது வர்த்தமானியை மீண்டும் வெளியிட்டு புதிய ஆட்சேர்ப்புகளை வழங்கத் தயாராகி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டினார்.
இந்த நிலைமை சாத்தியமான ஊழலை சுட்டிக்காட்டுவதாகவும் இது குறித்துது பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
