சிஐடியிலிருந்து வெளியேறிய அர்ச்சுனா!
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா நேற்றையதினம் வெளியிட்ட காணொளியொன்றில் தெரிவித்திருந்தார்.
முதலாவது அமர்வில் நடந்த சம்பவம்
அதன் பின்னர், குறித்த கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலிருந்து அர்ச்சுனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, தான் வெளியிட்ட நேரலையில் 'தமிழீழ மக்களுக்கு வணக்கம்' என்று விழித்திருந்தார்.
அவர் தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 19 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
