ஊழல் சர்ச்சையை மறந்து சலுகைகளை காப்பாற்ற கைகோர்க்கும் ரணில் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ஒழிப்பது என்பது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும்.
மேலும் இந்த விடயத்தை ஆராய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தார்.
இந்நிலையில் குறித்த விசாரணை குழு சமர்ப்பித்த பரிந்துரைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நீதியரசர் குழு பரிந்துரை
அரசியலமைப்பை திருத்தாமலேயே இந்தச் சலுகைகளை மாற்றலாம் என்று நீதியரசர் சித்ரசிறி குழு பரிந்துரைத்திருந்திருந்தது.

அதன்படி, நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த சலுகைகளை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டமூலம், குறித்து விவாதிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் கொழும்பில் சந்தித்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களது சட்ட ஆலோசகர்களும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
விமர்சிக்கப்பட்ட ரணில் - மைத்ரி
ஒரே அரசாங்கத்தின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும், ஒருவருக்கொருவர் சித்தாந்தங்களுக்கு எதிராக தன்னிச்சையாகச் செயல்பட்டு, நாட்டிற்கு மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, தங்கள் ஆணையை ஊழல் செய்த இரு தலைவர்களாக சமூகத்தில் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட ரணில் - மைத்ரிபால , இப்போது தங்கள் தனிப்பட்ட சலுகைகள் மீறப்படும் நிலையில் இந்த வழியில் இணைந்து செயல்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.

இது சமூகத்தில் ஒரு சிறப்பு விவாதத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இந்த மசோதா அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்த நாட்டின் ஐந்து முன்னாள் அரச தலைவர்களும் உத்தியோகபூர்வ குடியிருப்புகள், செயலக கொடுப்பனவுகள் மற்றும் உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகள் உட்பட பொது நிதியால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள்.
மேலும் அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 97,500 மட்டுமே மிகுதியாகும். இந்த விவாதத்தின் போது, அண்டை நாடான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் ஓ ய்வூதியம், அதிகாரப்பூர்வ குடியிருப்பு, சிறப்பு பாதுகாப்பு குழுவிலிருந்து (SPG) பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளுக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri