கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள் - மகள் மற்றும் மருமகனின் வெறித்தனம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் டிப்போ சந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலையில் இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அதற்கமைய, உயிரிழந்தவர் 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
சந்தேக நபர் கைது
பெண்ணின் மருமகன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றம் தொடர்பாக 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, வாரியபொல பொலிஸ் பிரிவின் ரன்தெனிய பகுதியில் இருந்து நேற்று ஒரு மகள் தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண் என அடையாளம்
இந்தக் கொலையில் உயிரிழந்தவர் ரன்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தக் கொலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
