சாமர சம்பத் எம்பி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்..
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மூன்றாம் இணைப்பு
இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, தற்போது கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு
இலஞ்ச ஆணையத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் பொசுபேற்று ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ததாகவும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான உரிமங்களைப் பெறுவதற்கு அந்த நிறுவனங்களுக்கு உதவியதற்காக, அவர்களிடமிருந்து ரூபா 8.1 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ஒரு விசாரணையைத் தொடங்கியிருந்தது.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக இன்று காலை (12) இலஞ்ச ஆணையத்திற்கு முன்னிலையான அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் முதன்மைத் தொழில்துறை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, அவரது தனிச் செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சியும் இந்த விசாரணை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டதற்கிணங்க, அவர் இன்று காலை (12) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

you may like this video
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri