அரசியலில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை: சமல் ராஜபக்ச
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமல் ராஜபக்ச
"அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த சமல் ராஜபக்சவிடம் அரசியல் நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri