டித்வா புயல்! அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் குற்றம் சுமத்தும் சமல்
அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருந்த நம்பிக்கையீனமே டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் என்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நம்பிக்கையுடனான செயற்பாடுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இயற்கை அனர்த்தங்களின் போது எந்த நிறுவனத்தையும் தள்ளி வைத்து செயற்பட முடியாது. அனைத்து நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அனர்த்தம் ஒன்று ஏற்படப் போவது நாம் அறிந்து கொண்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி நம்பிக்கையுடன் செயற்பட்டிருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம்.
முன்பை விட இதன் வேகம் அதிகமாகும். அதனால் கட்டுப்படுத்துவது கடினமானதாகும். ஆனால் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால் மரணங்களை குறைத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.