ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் எம்.எஸ்.எம் நழீம்
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ்.நழீம், பிரதி தவிசாளராக ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
17 உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் உப தவிசாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
திறந்த வாக்கெடுப்பு
குறித்த நகர சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் போட்டியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எம்.எஸ்.சமீம், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான முஹம்மட் சாலி நழீம் போட்டியிட்டதையடுத்து திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் பிரசன்னமான நிலையில் 16 பேருடன் இந்த தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ்.நழீமிற்கு ஆதரவாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினரும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்னர்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.எஸ்.சமீம் ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினருமாக 07 உறுப்பினர் வாக்களித்தனர்.
பிரதி தவிசாளர் தெரிவு
இதன் பிரகாரம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எஸ். நழீம் 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஏறாவூர் நகரசபையின் பிரதி தவிசாளராக போட்டியிட்ட ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் 9 வாக்குகளும் ஜக்கிய தேசிய கட்சி சார்பில் ஏ.எம்.எம். அன்வர் போட்டியிட்ட உறுப்பினருக்கு 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதையடுத்து ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த ஞானசேகரன் கஜேந்திரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா, தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
