ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க முன்மொழியப்பட்ட காரணங்கள்! இன்று அனுப்பப்படவுள்ள பதில்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கான முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்றைய தினம் (28.03.2023) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார கட்டண அதிகரிப்பு யோசனைக்கு எதிர்ப்பு
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மின்சார கட்டண அதிகரிப்பு யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டது முதல், ஜனக ரத்நாயக்க அரசாங்கத்தின் இலக்காக பேசப்பட்டு வருகின்றார்.
இந்நிலையிலேயே புதிய நகர்வும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
