வடக்கின் பெரும் சமர் ஆரம்பம்
வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 118ஆவது துடுப்பாட்டம் யாழில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டி, இன்றையதினம்(06.03.2025) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.இந்திரகுமார், யாழ் சென் ஜோன் கல்லூரி அதிபர் பி.துசிகரன் ஆகியோர்களின் இணைந்த தலைமையில் இந்த போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சி
இரு அணிகளுக்கான நாணய சுழற்சி இடம்பெற்றது.
அதில் யாழ். மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 14 மணி நேரம் முன்

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. இவர்தான், போட்டோ இதோ Cineulagam

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan
