புலம்பெயர் தமிழர் முடிவால் தடுமாறும் இலங்கை மத்திய வங்கி! சர்வதேச விமான சேவைகள் நெருக்கடியில் (VIDEO)
புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் அந்நிய செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய மூலமாகும்.இவை கடந்த சில நாட்களாக பின்னடைவை சந்தித்துள்ளமையானது இலங்கை மத்திய வங்கிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 18 ஆம் திகதிக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைமை,கையிருப்பு,புலம்பெயர் தமிழர்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட தகவல் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பணவீக்கம் 14 வீதம் அதிகரித்துள்ளதுடன், உணவு பணவீக்கம் 24 வீதமாகவும் அதிகரித்துள்ளது.பொருட்களுக்கு உண்மையில் கடுமையாக தட்டுப்பாடு நிலவியுள்ளது.இதன் காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சீனாவுடனான இலங்கைக்கான தொடர்பு தொடர்பில் இலங்கை விரிவான விளக்கங்களை பெற்றிருக்கவில்லை.இதன் காரணமாகவே இலங்கையின் பல முக்கிய துறைகள் சீனாவிடம் கைவசமாகியுள்ளது.
வெளிநாடுகளுக்கு கடனை திருப்பிச்செலுத்த இலங்கை மத்திய வங்கிக்கு அந்நிய செலாவணி தேவை.வர்த்தக வங்கிகளுக்கு வரும் அந்நிய செலாவணியில் 10 சதவீதம் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிவிட்டு இலங்கை ரூபாவை பெற வேண்டுமென்ற நியதி காணப்பட்டது.இவை கடந்த சில நாட்களில் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் அந்நிய செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய மூலமாகும்.இவை கடந்த சில நாட்களாக பின்னடைவை சந்தித்துள்ளமையானது இலங்கை மத்திய வங்கிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
பேரழிவை நோக்கி இலங்கை! வங்கிகளில் வைப்பிலிட்ட புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன?





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
