யாழ்ப்பாண மாவட்ட குடிசன வீட்டு வசதிகள் தொகை கணக்கெடுப்பு (Photos)
யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பின் முதற்கட்டமான கட்டிடங்களை நிரற்படுத்தல் நடவடிக்கையானது நிறைவடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் பணிப்பாளர், மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த புள்ளிவிபரவியல் பிரதிப் பணிப்பாளர் வித்தியானந்தநேசன் யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பின் முதற்கட்டமான கட்டிடங்களை நிரற்படுத்தல் நடவடிக்கையானது நிறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட பணிகள் பூர்த்தி
மேலும் தெரிவிக்கையில், குறுகிய காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ளது. 230000ற்கு மேற்பட்ட கட்டிடக்கூறுகளை யாழ்ப்பாணம் கொண்டுள்ளது இதன்போது தெரியவருகிறது.
காகிதத்தில் செய்யும் வேலைகளை இம்முறை இலத்திரனியல் முறையில் செய்திருக்கிறோம். காகிதத்தில் தரவுகளை சேகரிக்க 4 வருடங்கள் செல்லும். அந்த காலத்தை இலத்திரனியல் முறை குறைத்துள்ளது.
நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குடிசன மதிப்பீடு முக்கியம் என தெரிவித்துள்ளார்.
மாவட்ட வரைபடம்
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட வரைபடம், பிரதேச செயலாளர் பிரிவு வரைபடம் என்பன
மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.