தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெற்கில் இரகசிய நகர்வு! ஒப்பந்தத்தில் குறுக்கிட்ட இலங்கையின் தலைவர் (Video)
தமிழீழ விடுதலைப்புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி ஒன்றை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் நினைவுநாளில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இமாலய பிரகடனம் கொழும்பிலே நடந்து இருக்கிறது.
உலக அளவிலே இயங்கிய தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து உலக தமிழர் பேரவை உருவாக்கப்பட்டது. இதனுடைய முதலாவது தலைவர் எதிர்வீரசிங்கம். இவர் இலங்கையின் பிரபல ஒலிம்பிக் விளையாட்டு வீரர்.
இவர் தலைவராக நியமிக்கப்பட்ட போதே இன நல்லிணக்கம் என்ற விடயம் இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பனவெல்லாம் அங்கே புகுத்தப்படுகிறது.
இவர் இணக்க அரசியலுக்கு போகின்றார் என்று சொல்லி தான் இவரை விலக்கி விட்டு அருட் தந்தை எஸ்.ஜே.இமானுவேல் அடிகளாரை தலைவராக்கியிருந்தார்கள்.இவர் தமிழ் மக்கள் மீது அக்கறை கெண்ட ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடரந்தும் அவர் தெரிவிக்கையில்,