சீமெந்து தட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள்
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காணப்படும் கடும் சீமெந்து தட்டுப்பாடு காரணமாக நிர்மாணத்துறையை சேர்ந்த பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சீமெந்து தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாட்டு விலையான 950 ரூபாயை தாண்டி ஆயிரத்து 400 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் என்ற அதிகாரபூர்வமற்ற விலைக்கு ஒரு மூட்டை சீமெந்து விற்பனை செய்யப்படுகின்றது.
சீமெந்து தட்டுப்பாடு காரணமாக நிர்மாணத்துறையில் தொழில் புரியும் மேசன்கள், உதவியாளர்கள் உட்பட பலர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
சீமெந்தை இறக்குமதி செய்வதற்கான டொலர் பற்றாக்குறையாக இருப்பதே சீமெந்து தட்டுப்பாட்டுக்கான காரணம் என இலங்கையின் பிரதான சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் சீமெந்து தேவையின் 60 வீதம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதுடன், 40 வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்கள் சீமெந்து இறக்குமதியை நிறுத்தியுள்ளமை இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
