சீமெந்தை வைத்து மேற்கொள்ளப்படும் ஏமாற்று வேலைகள்
தற்போது சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு சில நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று வேலை என கட்டிட, கைத்தொழில் மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து கையிருப்பு இன்னும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீமெந்து மூட்டை ஒன்று 1500 ரூபாவிற்கும் குறைவான விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு சில நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நிறுவனங்கள் நாட்டின் சீமெந்தில் 32 சதவீதமும், 18 சதவீதமும் இறக்குமதி செய்து பொதியிடப்பட்ட பொருட்களை உள்நாட்டில் விநியோகம் செய்கின்றன என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.



