ரஷ்ய -உக்ரைன் இடையில் ஒருவார கால போர் நிறுத்தம்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களில் நிலவும் கடும் குளிரைக் கருத்தில் கொண்டு ஒரு வார காலத்திற்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தாம் விடுத்த கோரிக்கையை புடின் ஏற்றுக் கொண்டதாக, ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் வீடுகளுக்குள் வெப்பநிலை 2°C வரை குறைந்துள்ளதால், இந்த ஒரு வார கால போர் நிறுத்தம் அங்குள்ள மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம்
ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால், அதற்குப் பதிலாக உக்ரைனும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.

கடும் குளிரால் மக்கள் அவதிப்படும் வேளையில், இந்த "பாதுகாப்பு உறுதிமொழி" காப்பாற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ரஷ்யா அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதே சமயம், உக்ரைனின் மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் கட்டமைப்புகள் மீதான, ரஷ்ய தாக்குதல்களால் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri